- Home
- Astrology
- Jan 07 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, அடுத்தடுத்து கிடைக்கும் அதிர்ஷ்டம்.! இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்.!
Jan 07 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, அடுத்தடுத்து கிடைக்கும் அதிர்ஷ்டம்.! இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்.!
January 07, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 07, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிநாதன் சந்திரன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவான் ராசியிலும், ஏழாம் வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை பெற்றுள்ளனர். அஷ்டம சனி நீடிப்பதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமாகும்.
பொதுவான பலன்கள்:
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று வேகம் எடுக்கும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து அல்லது வீண் விவாதங்கள் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
நிதி நிலைமை:
தன ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்பு உண்டு. தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பெரிய தொகையை பரிமாற்றம் செய்வதற்கு முன்னர் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். கண் எரிச்சல் அல்லது உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. போதுமான நீர் அருந்துவது அவசியம். மாணவர்கள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நாள். மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்
பரிகாரம்:
கடக ராசிக்காரர்கள் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது சிறந்தது. புதன்கிழமை என்பதால் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பலன்களைத் தரும். அஷ்டம சனியின் தாக்கம் குறைய பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த அரிசியை உணவாக கொடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

