- Home
- Astrology
- இளமை பருவத்திற்கு திரும்பிய ராகு பகவான்.! பணம், பதவி, புகழுடன் ஜொலிக்கப்போகும் ராசிகள்.!
இளமை பருவத்திற்கு திரும்பிய ராகு பகவான்.! பணம், பதவி, புகழுடன் ஜொலிக்கப்போகும் ராசிகள்.!
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு பகவான் இளமைப்பருவத்தில் நுழைவது பல ராசிக்காரர்களுக்கு நல்ல காலங்களை கொண்டு வரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இளமை பருவத்தில் ராகு பகவான்
ஜோதிடத்தில் ராகு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். இவர் கலியுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரகமாவார். பொருள், வசதிகள், செல்வ செழிப்பு, சக்தி, புத்திசாலித்தனம், நவீன சிந்தனை ஆகியவற்றில் காரகராவர். நிழல் கிரகமாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒரு நபரின் வாழ்க்கை போக்கை திடீரென மாற்றம் சக்தி ராகுவுக்கு உண்டு.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு பகவான் இளமை பருவத்தில் நுழைந்திருக்கிறார். இளமைப் பருவம் என்பது ஒரு கிரகத்தின் சுறுசுறுப்பான மற்றும் அதிக பலன்களை தரும் காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு கிரகத்தில் முழு பலமும் வெளிப்படும்.
இளமைப் பருவம் என்றால் என்ன?
ஜோதிடத்தின்படி ஒரு கிரகத்தின் டிகிரி பலம் 12 முதல் 18 வரை இருந்தால் அது இளமைப் பருவமாக கருதப்படுகிறது. டிசம்பர் 30, 2025 அன்று ராகு 18 டிகிரியில் இருந்தார். எப்போதும் பின்னோக்கி நகர்வதன் விளைவாக அவரின் டிகிரி பலம் குறைய தொடங்குகிறது.
ஏப்ரல் 15, 2026 அன்று அது படிப்படியாக 12 ஆக குறையும். இதன் பொருள் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் ராகு பகவான் அனைத்து ராசிகளையும் முழு பலத்துடன் தனது செல்வாக்கை செலுத்துவார். இருப்பினும் ராகுவின் இளமை பருவம் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். மேலும் அவர் ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளை பார்வையிடுகிறார். மேலும் குருவின் செல்வாக்கு ஜூன் மாதம் வரை ராகுவின் மீது இருக்கும். இதனால் பலன்கள் இன்னும் அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
நிலுவையில் இருக்கும் ஆசைகள் நிறைவேறக்கூடும். 11 வது வீட்டில் ராகுவின் செல்வாக்கு கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் நன்மைகள் அதிகரிக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம்.
கும்பம்
கும்ப ராசியின் லக்ன ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்கிறார். அதேநேரம் சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். இது சனி பகவானின் இறுதி கட்ட பலன்களைத் தருகிறது. குரு ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். இதன் விளைவாக கும்ப ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் சுப பலன்களை அனுபவிப்பீர்கள். ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.
வேலை செய்பவர்கள் பணியில் பாராட்டுகளைப் பெறுவீர்கள் புதிய வேலை அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிக கூட்டாளிகளால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வணிகத்தில் வெற்றி கிடைக்கும். பஞ்சம குரு மாணவர்களுக்கு சுப பலன்களை வழங்குவார். படிப்பு, போட்டித் தேர்வுகள் மற்றும் அறிவுசார் விஷயங்களில் வெற்றி கிட்டும்.
மீனம்
மீன ராசியின் 12-ம் வீட்டில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். மீன ராசிக்கு சனி திசையும் நடந்து வருகிறது. சனி பகவான் லக்னத்தில் இருக்கிறார். இதன் விளைவாக மன அழுத்தம், தேவையற்ற செலவுகள், சில நாட்களாக நீடித்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். ராகு பகவானின் செல்வாக்கால் வெளிநாட்டு தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடு தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
முதலீடுகளில் இருந்து கணிசமான லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். எட்டாவது வீட்டில் ராகுவின் பார்வை இருப்பது, திடீர் நிதி ஆதாரங்கள் அல்லது திடீர் செல்வ வரவை குறிக்கிறது. நீதிமன்ற வழக்குகள், வேலைவாய்ப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

