- Home
- Astrology
- கேது பெயர்ச்சி 2026: சூரியனின் நட்சத்திரத்தில் ஞானகாரகன்.! உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா? ஆபத்தா?
கேது பெயர்ச்சி 2026: சூரியனின் நட்சத்திரத்தில் ஞானகாரகன்.! உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா? ஆபத்தா?
Ketu Peyarchi 2026 Palangal: ஜனவரி 12, 2026 ஆம் ஆண்டு கேது பகவான் தனது நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறார். இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கேது பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் கேது பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் எப்போதும் பின்னோக்கிய நிலையிலேயே பயணிக்கிறார். ஞான காரகனாக விளங்கும் கேது, ஆத்ம காரகனாக விளங்கும் சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரிக்க இருப்பது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிக நற்பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கேது நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். கேது பகவான் பொருளாதார ரீதியான நேர்மறையான மாற்றங்களை உங்களுக்கு கொண்டு வர இருக்கிறார். வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும் காலம் நெருங்கியுள்ளது. தொழில் செய்து வருபவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். மாணவர்கள் கல்வியில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடமான தைரிய, வீர ஸ்தானத்திற்கு கேது பகவான் வருகிறார். இதன் காரணமாக உங்கள் தைரியம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். சகோதர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து பிரச்சனையில் சகோதரர்களுடன் ஏற்பட்ட தகராறுகள் நீங்கும். பாகப்பிரிவினர்கள் சுமுகமாக நடக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராமல் பல வழிகளில் இருந்து பணம் குவியத் தொடங்கும். இதன் காரணமாக வங்கி இருப்பு அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கி குவிப்பீர்கள். சகோதர சகோதரிகளின் வழியாக உதவிகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
தனுசு
தனுசு ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இது மிகவும் சிறப்பான இடமாகும். தந்தை வழியில் ஆதாயங்கள் உண்டாகும். தாய் வழியில் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கலாம். இதுவரை தடைபட்டு நின்ற சுப காரியங்கள், திருமணம், வீடு கட்டுதல் ஆகியவை தடையின்றி நடக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு வேலையில் சேர்வதற்கான அழைப்பிதழ் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் அதிக மன அழுத்தத்துடன் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் கை நிறைய ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

