- Home
- Astrology
- Weekly Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் வீடு, நிலம், சொத்துக்களை குவிக்கும் யோகம் கிடைக்கும்.!
Weekly Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் வீடு, நிலம், சொத்துக்களை குவிக்கும் யோகம் கிடைக்கும்.!
Simma Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ஆக்கபூர்வமானதாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். சூரிய பகவானின் பலத்தால் உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். பிள்ளைகள் அல்லது உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். சுக்கிரனின் அருளால் வரும் சவால்களை எல்லாம் திறமையாக சமாளிப்பீர்கள். சனி பகவானால் உறவுகளில் சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே நிதானம் தேவை.
நிதி நிலைமை:
இந்த வாரம் ஐந்தாம் வீடு வலுப்பெறுவதால் பங்குச் சந்தை அல்லது இதர முதலீடுகளில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத அத்தியாவசிய செலவுகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். புதிய கடன்களை தவிர்ப்பது நல்லது. வேலை அல்லது திறமைக்காக எதிர்பாராத வகையில் பரிசுகள் அல்லது ஊக்கத் தொகைகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்:
இந்த வார இறுதியில் கிரகங்களின் மாற்றத்தால் அஜீரணம், சோர்வு அல்லது மூட்டு வலி போன்ற சிறிய உபாதைகள் வரலாம். குருவின் பார்வையால் மன ஆரோக்கியம் மற்றும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். செவ்வாய் பகவானின் சஞ்சாரத்தால் உடல் நலனில் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக வயிறு மற்றும் முதுகு சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை.
கல்வி:
ஐந்தாம் வீட்டில் சூரியன் புதன் இணைவு காரணமாக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பு தொடர்பான புதிய சிந்தனைகள் உதயமாகும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குருவின் பார்வையால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பும், ஆலோசனைகளும் ஏற்கப்படும். உங்கள் கருத்துக்களுக்கு உயர் அதிகாரிகளிடம் மதிப்புக்கூடும். புதிய தொழில்நுட்பங்களை கையாளுவதிலும் திட்டங்களை தொடங்குவதிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும் வெற்றி பெறுவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
குழந்தைகள் அல்லது பிற வழிகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். திருமண உறவில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. செவ்வாய் பகவானின் நிலை காரணமாக தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
பரிகாரம்:
உங்கள் ராசிக்கு அதிபதியான சூரிய பகவானை வழிபடவும். காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிற வஸ்திரங்கள் அணிவது, கொண்டக்கடலை படைத்து விநியோகம் செய்வது அதிர்ஷ்டத்தை கூட்டும். இயலாதவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, குறிப்பாக கல்விக்கு உதவுவது பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

