- Home
- Astrology
- Sevvai peyarchi 2026: 2026-ல் செவ்வாய் பகவான் இந்த 5 ராசிகளுக்கு வாரி வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
Sevvai peyarchi 2026: 2026-ல் செவ்வாய் பகவான் இந்த 5 ராசிகளுக்கு வாரி வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
Sevvai peyarchi 2026 Rasi Palangal: வரும் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது. செவ்வாயின் பலம் அதிகரித்தால், தொட்டதெல்லாம் பொன்னாகும். சனியால் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

Mars Transit
ஜோதிடத்தில் செவ்வாய் வலிமை, தன்னம்பிக்கை, தைரியத்தைக் குறிக்கிறார். 2026 ஏப்ரல் 2ல் செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
செவ்வாய் ரிஷப ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், 2026ல் பண வரவு அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். முதலீடுகளில் நல்ல லாபம், வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம்
செவ்வாய் பெயர்ச்சி கடக ராசிக்கு யோகத்தை தரும். 2026ல் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். வெளிநாடு தொடர்பான பணிகள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
மகரம்
செவ்வாய் மகர ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தைரியமும், வெற்றியும் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப நிதிப் பலன்கள் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்
செவ்வாய் விருச்சிக ராசிக்கு அதிபதி. 2026ல் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாழ்க்கை சுபமாக மாறும். இது உங்களை நிதி ரீதியாக பலப்படுத்தும். பங்குச் சந்தை அல்லது வியாபாரத்தில் லாபம் பெறலாம்.
மீனம்
மீன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் ஆளுமையை மேம்படுத்துவார். தன யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள், பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

