இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினி...எதுக்காக இவ்வளவு ரிஸ்க்? நெட்டிசன்கள் எச்சரிக்கை
Aishwarya Rajinikanth video: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது செல்ல மகன்களுடன் ஐபிஎல் பார்க்க கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யா -தனுஷ் திருமணம்:
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.
டைரக்ஷனில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா?
இதையடுத்து, தனுஷ் உடனான பிரிவிற்கு பிறகு, இருவரும் தங்களுடைய திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்கள். டைரக்ஷனில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டார். ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா:
இருவரும் அவ்வப்போது, தங்களுடைய இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.முன்னதாக, தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜா கச்சேரியில் கலந்துகொண்டார். இதேபோன்று, ஐஸ்வர்யாவும் தனது மகன்கள் இருவரிடமும் அடிக்கடி நேரம் செலவிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா தனது மகன்களுடன் ஐபிஎல் நிகழ்ச்சியில்:
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும், ஐஸ்வர்யா தனது வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம் மூலம் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து விமர்சனங்களை பெற்று வருகிறார்.
வெறித்தனமாக ஒர்கவுட் வீடியோ:
இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா தனது மகன்களுடன் ஐபிஎல் பார்க்க கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். அங்கும் வொர்க் அவுட் செய்வதை விடாமல், வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் எதுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க், பெல்ட் போடாமல் வெயிட் தூக்கதீங்க ஐஸ்வர்யா..? என அன்புடன் அவரை கண்டித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த விஷயத்தில் ஐஸ்வர்யா மிகவும் பிடிவாதமாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.