தக்காளி விலை பல்டி.! அதிகரித்தது வரத்து- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. வெங்காயம், பிற காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது.

சமையலும் தக்காளி வெங்காயமும்
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக இருக்கும். அந்த வகையில் பச்சை காய்கறிகளைவிட தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் அதிகளவு வாங்கி செல்வார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலையானது உச்சத்தை தொட்டு வருகிறது.
ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே பை நிறைய வாங்கி சென்ற மக்கள் அரை கிலோ ஒரு கிலோ என்ற அளவிற்கு வாங்கி சென்றனர்.
தக்காளி விலை என்ன.?
இதற்கு முக்கிய காரணமாக அண்டை மாநிலங்களில் கன மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு என கூறப்பட்டது. இதனால் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது உயர்ந்தது. இந்தநிலையில் தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கூடை நிறைய தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது சற்று குறைய தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தரத்தை பொறுத்து தக்காளி விலையானது 25 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களாக உயர்ந்திருந்த தக்காளி விலை குறைந்தது இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
இதே போல சமையலுக்கு முக்கிய காய்கறிகளாக உள்ள வெங்காயத்தின் விலையானது குறைந்து வருகிறது. மூட்டை மூட்டையாக வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலையானது சரிந்து காணப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும் செய்யப்படுகிறது.
கேரட் விலை என்ன.?
பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் 1 கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும்,
வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.