அந்த உடையை எனக்கு கொடுங்க.. ரூ.8 கோடி தரேன்..! லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த ஆஃபர்

ஃபிஃபா உலக கோப்பையை பெற்றபோது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த அரேபிய அரச அங்கியை கொடுத்தால், ரூ.8.25 கோடி தருவதாக ஓமன் நாட்டு எம்பி ஒருவர் ஆஃபர் கொடுத்துள்ளார்.
 

Lionel Messi offered one million dollar for bisht he wore while lifting fifa world cup

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான பரபரப்பான ஃபைனலில் ஃபிரான்ஸை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி உலக கோப்பையை வென்றது.

சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலக கோப்பை இதுவென்பதால், தனது கடைசி உலக கோப்பையை வென்று தனது வாழ்நாள் கனவை நனவாக்கிக்கொண்டார் மெஸ்ஸி. இந்த உலக கோப்பையை வென்றிருக்காவிட்டால், அவரது சர்வதேச கால்பந்து கெரியர் முழுமையடைந்திருக்காது.

சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்

உலக கோப்பையை பெற்றபோது கத்தார் ஆட்சியாளர்களும், ஃபிஃபா தலைவரும் அவருக்கு அரேபிய அரச அங்கியை(Bisht) அணிவித்தனர். அரேபிய அரசர்களும் உயர் பதவியினரும் மட்டுமே அணியும் அந்த உடை தங்க இழைகளால் உருவாக்கப்பட்டது. மெஸ்ஸியை கௌரவிக்கும் விதமாக அந்த உடை அணிவிக்கப்பட்டது. அரேபிய அரச அங்கி அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

தனக்கு அணிவிக்கப்பட்ட மரியாதைக்காக அதை மறுக்காமல் அணிந்துகொண்ட லியோனல் மெஸ்ஸி, கோப்பையை பெற்றதும் அந்த உடையை கழட்டிவிட்டார். தனது அர்ஜெண்டினா கால்பந்து அணி உடையுடன் தான் உலக கோப்பையை தூக்கி மகிழ்ந்தார்.

AUS vs SA: நானே ஒதுங்கிக்கிறேன்.. விலகிய சீனியர் வீரர்! பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு

இந்நிலையில், ஓமன் எம்பியும் வழக்கறிஞருமான அகமது எஸ் அல்பர்வானி என்பவர், அந்த உடையை தனக்கு கொடுத்தால் ரூ.8.25 கோடி தருவதாக லியோனல் மெஸ்ஸிக்கு ஆஃபர் கொடுத்துள்ளார். அரேபிய அரச உடையான அதை அணிவது பெரும் கௌரவம் என்பதால் அந்த உடையை அவர் பெரிய தொகைக்கு கேட்டுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios