செம கெத்தா திரும்ப வருவோம்.. ஃபிஃபா உலக கோப்பை தோல்விக்கு பின் கிலியன் எம்பாப்பே உற்சாகம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கிலியன் எம்பாப்பே, உலக கோப்பை தோல்விக்கு பின், திரும்ப வருவோம் என்று உற்சாகமாக டுவீட் செய்துள்ளார். அந்த டுவீட் செம வைரலாகிவருகிறது.
 

kylian mbappe tweets that we will comeback after fifa world cup 2022 final defeat against argentina

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு இறுதிப்போட்டிக்கான அனைத்து பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அந்த போட்டி அமைந்தது.

இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ம் பாதியில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டம் டிராவானது. கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்பேவும் தலா ஒரு கோல் அடிக்க, மீண்டும் ஆட்டம் 3-3 என டிராவானது. அதன்பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸ் 2 கோல் மட்டுமே அடிக்க, 4 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.

FIFA World Cup: செம ஃபைனல்.. ஜெயித்தது கால்பந்து விளையாட்டு தான்! உலக கோப்பையில் சத்குரு மண் காப்போம் பிரசாரம்

இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அணியின் வேறு எந்த வீரருமே கோல் அடிக்காத நிலையில், கடுமையாக போராடி 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய உதவிய எம்பாப்பே, பெனால்டி ஷூட் அவுட்டிலும் கோல் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் கோல் அடிக்காததால் ஃபிரான்ஸ் தோற்றது. இந்த உலக கோப்பையை அர்ஜெண்டினா வென்றிருந்தாலும், தனி ஒருவனாக ஃபிரான்ஸின் வெற்றிக்காக போராடிய எம்பாப்பே, ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார்.

ஃபிஃபா உலக கோப்பையில் ஃபைனலில் அடித்த 4 கோல்களுடன் சேர்த்து மொத்தமாக 9 கோல்கள் அடித்த எம்பாப்பே, அதிக கோல்கள் அடித்த வீரருக்கான கோல்டன் பூட்-டை வென்றார். கோல்டன் பூட் வென்றாலும், ஃபிரான்ஸ் அணி தோற்றதால் எம்பாப்பே அது மகிழ்ச்சியளிக்கவில்லை. கோல்டன் பூட்-டை சோகத்துடன் கொண்டுசென்றார். தனது அணிக்காக எம்பாப்பே போராடிய விதமும், அவரது ஆட்டமும் அனைவரையும் கவர்ந்தது.

FIFA World Cup ஃபைனலில் ஹாட்ரிக் கோல்.. கிலியன் எம்பாப்பே வரலாற்று சாதனை

ஃபைனலில் தோற்ற விரக்தியில் சோகமாக இருந்த எம்பாப்பேவை களத்திற்குள் சென்று ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் தேற்றிய சம்பவம் பெரும் வைரலானது.

தோல்வி விரக்தியில் இருந்த எம்பாப்பே, அந்த சோகத்திலிருந்து மீண்டு, திரும்ப வருவோம் என்று செம உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் டுவீட் செய்துள்ளார். ஒரு விளையாட்டு வீரருக்கே உரித்தான மனவலிமையுடன், மீண்டும் கம்பேக்கிற்கு தயாராகிவிட்ட எம்பாப்பேவின் டுவீட் செம வைரலாகிவருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios