என் அம்மா.. என் ஹீரோ.. கால்பந்தாட்ட வீராங்கனை சந்தியா ரங்கநாதனின் உருக்கமான டுவீட் வைரல்
தனது தாய் தான் தனது ஹீரோ என்றும், தனி நபராக தன்னையும் தனது சகோதரியையும் வளர்த்து ஆளாக்கியதாகவும் இந்திய கால்பந்தாட்ட வீராங்கனை சந்தியா ரங்கநாதனின் உருக்கமான டுவீட் செம வைரலாகிவருகிறது.
இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்கள வீராங்கனை சந்தியா ரங்கநாதன். அவர் தனது தாய்க்காக அண்மையில் பதிவிட்ட டுவீட் அனைவரது உள்ளங்களையும் வென்றது.
இந்தியா - நேபாளம் இடையே சென்னையில் நடந்த போட்டியை தமிழகத்தை சேர்ந்த சந்தியா ரங்கநாதனின் தாய் நேரில் பார்த்து ரசித்தார். அதன்பின்னர் தான், தனது தாய் குறித்து டுவீட் செய்திருந்தார் சந்தியா ரங்கநாதன்.
ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருந்தால் பெரிய பிரச்னை..! பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விளாசிய ஆலன் பார்டர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 26 வயது சந்தியா, இந்திய கால்பந்து அணியின் முன்கள வீராங்கனை. இந்திய மகளிர் கால்பந்து அணியில் 2018ம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். 2018-2019ல் இந்திய மகளிர் லீக்கில் மதிப்புமிகு வீராங்கனைக்கான விருதை வென்றார்.
தன்னையும் தனது சகோதரியையும் தனி நபராக வளர்த்து ஆளாக்கிய தனது தாய் குறித்து சந்தியா பதிவிட்ட டுவீட்டில், நான் இன்றைக்கு என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் தாய் தான் காரணம். தனி நபராக என்னையும் என் சகோதரியையும் வளர்த்தெடுத்தார் என் தாய். அவருக்கு வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தோம். எனக்கு மிகுந்த ஆதரவாக இருப்பவர் என் தாய் தான். கடைசியில் ஒரு வழியாக நான் நாட்டிற்காக விளையாடியதை நேரில் பார்த்துவிட்டார் என் தாய். என் அம்மா.. என் ஹீரோ என்று பதிவிட்டிருந்தார்.
அந்த டுவீட் செம வைரலாகி அனைவரது நெஞ்சங்களையும் வென்றது.