FIFA World Cup 2022: என் கண்ணுல படக்கூடாதுனு “சாமி”கிட்ட வேண்டிக்க..! மெஸ்ஸிக்கு மெக்ஸிகோ பாக்ஸர் மிரட்டல்
மெக்ஸிகோ கால்பந்து அணியின் ஜெர்சி மற்றும் கொடியை அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தரையில் போட்டதால் கடுங்கோபமடைந்த மெக்ஸிகோ பாக்ஸர் கேனலோ அல்வரெஸ் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் போர்ச்சுகல் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் இந்த உலக கோப்பையில் ஆடிவரும் அர்ஜெண்டினா அணி, முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. எனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 2வது போட்டியில் மெக்ஸிகோவை எதிர்கொண்டது.
FIFA World Cup 2022: உருகுவே அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு போர்ச்சுகல் தகுதி
அர்ஜெண்டினா - மெக்ஸிகோ இடையேயான போட்டியில் ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு முதல் கோல் அடித்தார் லியோனல் மெஸ்ஸி. இந்த கோல் ஃபிஃபா உலக கோப்பையில் அவரது 8வது கோல். இதன்மூலம், ஃபிஃபா உலக கோப்பைகளில் அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை மாரடோனாவுடன் பகிர்ந்துகொண்டார் மெஸ்ஸி. அதன்பின்னர் மற்றொரு வீரரும் கோல் அடிக்க, 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது.
விளையாட்டு வீரர்களுக்கு வயது வெறும் எண்களாகிவிட்டது..! முன்மாதிரி ரொனால்டோ.. எப்படி சாத்தியமானது..?
அந்த வெற்றியை, போட்டிக்கு பின் டிரெஸிங் ரூமில் அர்ஜெண்டினா வீரர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அப்போது மெக்ஸிகோ அணியின் ஜெர்சி மெஸ்ஸியின் காலுக்கு அடியில் கிடந்தது.
அதைக்கண்டு கடுங்கோபமடைந்த மெக்ஸிகோ பாக்ஸர் காலெனோ அல்வரெஸ், மெக்ஸிகோ ஜெர்சியை வைத்து மெஸ்ஸி தரையை துடைத்ததை பார்த்தீர்களா..? என் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமென இறைவனிடம் மெஸ்ஸி வேண்டிக்கொள்ளட்டும். நான் அர்ஜெண்டினாவை எப்படி மதிக்கிறேனோ, அதேபோல் மெஸ்ஸி மெக்ஸிகோவை மதிக்க வேண்டும். நான் ஒட்டுமொத்த நாட்டை பற்றி பேசவில்லை. மெக்ஸிகோவை பற்றி கூறுகிறேன் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.