FIFA World Cup 2022: உருகுவே அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு போர்ச்சுகல் தகுதி

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றது.
 

fifa world cup 2022 portugal beat uruguay by 2 0 goals and qualified for round 16

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரேசில் மற்றும் ஃபிரான்ஸ்  அணிகள் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன.

அந்த அணிகளை தொடர்ந்து போர்ச்சுகலும் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. போர்ச்சுகல் அணி முதல் போட்டியில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் உருகுவே அணியை எதிர்கொண்டது.

விளையாட்டு வீரர்களுக்கு வயது வெறும் எண்களாகிவிட்டது..! முன்மாதிரி ரொனால்டோ.. எப்படி சாத்தியமானது..?

போர்ச்சுகல் - உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2ம் பாதியில் 54வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் கோல் அடிக்க, 1-0 என முன்னிலை வகித்தது.

FIFA World Cup 2022: பரபரப்பான போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி கானா வெற்றி

கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஃபெர்னாண்டஸ் 2வது கோல் அடிக்க, 2-0 என வெற்றி பெற்ற போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios