ஃபிஃபா உலகக் கோப்பை: பிரான்ஸ் தோல்வியால் பாரிஸில் நடந்த கலவரம் - 115 கைது!
அர்ஜெண்டினாவுக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் தோல்வியை தழுவிய நிலையில் அதன் தலைநகரான பாரிஸில் கலவரம் நடந்துள்ளது.
கத்தார் நாட்டில் 22 ஆவது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 கோல் அடித்தது.
இதையடுத்து, சிறிது நேரத்திலேயே பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே அடுத்தடுத்து 2 கோல் அடிக்க, முடிவில் இரு அணிகளும் சமைநிலையில் இருந்தன. அதன் பிறகு போட்டியை தீர்மானிக்கும் வகையில் அரைமணி நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. அப்போது, இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடிக்க, அப்போதும் போட்டி 3-3 என்று சமநிலையானது.
சர்ச்சையான லியோனல் மெஸ்ஸியின் தங்க உடை விவகாரம்!
கடைசியாக வழங்கப்பட்ட ஃபெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா 4 கோல்களும், பிரான்ஸ் 2 கோல்களும் அடிக்கவே, அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடியது. இதற்கு முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டும், 1986 ஆம் ஆண்டும் அர்ஜெண்டினா அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரான்ஸ் அணி உலகக் கோப்பையில் தோல்வியை தழுவிய நிலையில், அந்நாட்டு தலைநகர் பாரிஸில் கலவரம் வெடித்துள்ளது.
மும்பை வாழ் தமிழர்களுக்கான 5 ஓவர் கிரிக்கெட் போட்டி..! ஆர்வமாக கலந்து கொண்ட இளைஞர்கள்
பாரிஸில் உள்ள ஷாம்ப்ஸ் எலீசீஸில் கூடியிருந்த கால்பந்து ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால், அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட 115 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?