ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல் அடித்த பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே அதிக சம்பளம் வாங்கும் வீரராக கருதப்படுகிறார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் பிறந்தவர் தான் கிலியன் எம்பாப்பே. இவரது முழு பெயர் கிலியன் எம்பாப்பே லொட்டின். இவர் பிரான்ஸ் அணியின் ஃபார்வார்டு டிபெண்டர். 6 வயதிலேயே தந்தையின் கால்பந்து அகாடமியில் சேர்ந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு 16 ஆவது வயதில் மொனாக்கோ கிளப்பில் சேர்ந்தார். பிரான்ஸ் அணிக்காக அதிக சம்பளம் வாங்கும் வீரரும் இவர் தான். அதாவது, தோராயமாக 185 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் வாங்குகிறார். இவருடைய ஒரு போட்டிக்கான சம்பளம் 185 கோடி அமெரிக்க டாலர். இது தவிர்த்து ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால் அதற்கு 80 லட்சம் அமெரிக்க டாலர் வாங்குகிறாராம்.
இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு எனக்கு ஓய்வே கிடையாது: வெற்றிக் கோப்பையுடன் லியோனல் மெஸ்ஸி நச் பதில்!
இது தவிர, நிக் (நைக்), ஹுப்லாட், இஏ ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்படுகிறார். இதற்காகவும் அவருக்கு 22 மில்லிய யூரோப் என்று பேஸ் சம்பளம் என்று பேசப்பட்டுள்ளதாம். ரேஞ்ச் ரோவர், ஃபெர்ராரி, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய கார்களை வைத்திருக்கிறார். இவருடைய ஜெர்ஸியின் நம்பர் 7. இவருடைய தந்தை கால்பந்து பயிற்சியாளர், அம்மா கைப்பந்து வீராங்கனை. இவர் தனது தோழி குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார்.
இவர் எப்போதும் யூடியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் 56.5 மில்லியன் பாலோயர்ஸ் வைத்திருக்கிறார். ஆனால், வெறும் 334 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். இதே போன்று டுவிட்டரில் 6.4 மில்லியன் பாலோயர்ஸ் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், நடந்து முடிந்த கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல் அடித்தார். எனினும், அவர் அடித்த கோல் வீணாகவே ஃபெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றது.