சர்ச்சையான லியோனல் மெஸ்ஸியின் தங்க உடை விவகாரம்!
ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட தங்க உடை சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்த ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி ஃபெனாலடி ஷூட் அவுட் முறையில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு சாம்பியன் டிராபி கொடுப்பதற்கு முன்னதாக கத்தார் நாட்டின் ஆட்சியாளரும், ஃபிஃபா தலைவரும் சேர்ந்து பிஷ்ட் (bisht) என்று அழைக்கப்படும் அரேபிய பாரம்பரிய உடையை அணிவித்துள்ளனர்.
ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
அர்ஜெண்டினா அணியின் உடையை மூடி மறைக்கவே கத்தார் இவ்வாறு நடந்து கொள்கிறது என்று சர்ச்சையை ஏற்படுத்தியது. வெற்றி கோப்பையை கொடுப்பதற்கு முன்னதாக அந்த தங்க உடையை அணிந்துகொள்ள அவரிடம் கூறப்பட்டதுமே, ஒரு நிமிடம் குழம்பிப்போயுள்ளார். அதன் பிறகு அவருக்கு விளக்கமளித்த பின்னரே அவர் அந்த உடையை அணிந்து கொண்டதாக தெரிகிறது. மெஸ்ஸி அணிந்து கொண்ட அந்த உடையின் சிறப்பு என்னவென்று தெரியுமா? பிஷ்ட் எனப்படும் அரேபிய பாரம்பரிய உடையானது தங்க இழைகளால் உருவாக்கப்பட்டது. கத்தார் உலகக் கோப்பையின் வண்ணத்திலும் அதை தைத்திருக்கின்றனர்.
இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு எனக்கு ஓய்வே கிடையாது: வெற்றிக் கோப்பையுடன் லியோனல் மெஸ்ஸி நச் பதில்!
முழுக்க முழுக்க அரசர்களுக்கான சிறப்பு உடை:
மாபெரும் கௌரவத்தின் அடையாளமாக அங்கி அணியப்படுகிறது. அரேபிய நாடுகளில், அரசர்கள், உயர் பதவியில் இருக்கும் இமான்கள், அமீர்கள் ஆகியோர் முக்கியமான தருணங்களில் இந்த உடையை அணிந்து கொள்வார்கள். அந்த பிஷ்ட் உடையில் காணப்பட்ட லியோனல் மெஸ்ஸிக்கு கத்தார் மற்றும் அரேபிய மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அர்ஜெண்டினா அணிக்காக 172 போட்டிகளில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணி 3ஆவது முறையாக இந்த ஃபிஃபா உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
FIFA World Cup ஃபைனலில் ஹாட்ரிக் கோல்.. கிலியன் எம்பாப்பே வரலாற்று சாதனை