சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர். தமிழகத்தின் திருச்சி,கோவை,சென்னை, கரூர் உட்பட பலநகரங்களில் இருந்து ஏரளாமானோர் அதிரடியாக கைதாகினர்.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

இந்தநிலையில் முகநூலில் ஆபாச படத்தை பரப்பியதாக ஈரோட்டில் வாலிபர் ஒருவர் கைதாகி இருக்கிறார். ஈரோட்டைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் யோகேஸ்வரன்(35). அந்த பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது முகநூல் கணக்கில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்தும், அதை பாலியல் நோக்கத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் யோகேஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் யோகேஸ்வரனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் கொடுமை தாங்க முடியல ஐயா.. எங்களை கருணை கொலை செஞ்சுருங்க..! பரிதவிக்கும் வயதான தம்பதி..!