மகன் கொடுமை தாங்க முடியல ஐயா.. எங்களை கருணை கொலை செஞ்சுருங்க..! பரிதவிக்கும் வயதான தம்பதி..!
வீட்டில் மின்சாரத்தை துண்டித்தும் குடிநீர் பிடிக்க விடாமலும் மகன் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் வாழ முடியாமல் தத்தளிக்கும் தங்களை கருணை கொலை செய்துவிட வயதான தம்பதியர் இருவரும் பரிதாபத்தோடு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன்(85). இவரது மனைவி கருணையம்மாள்(65). இந்த தம்பதியினருக்கு பழனிசாமி என்கிற மகனும், கண்ணம்மாள் என்கிற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னியப்பன் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டு வயதான தம்பதியர் இருவரையும் பழனிச்சாமி கொடுமைப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்னியப்பனும் அவரது மனைவி கருணையம்மாளும் வந்தனர். அவர்களது புகார் மனுவில், சொத்துக்களை ஏமாற்றி வாங்கிவிட்டு கடந்த 10 ஆண்டுகளாக இருவரையும் தங்களது மகன் கொடுமை செய்வதாக கூறியுள்ளனர். மகனும் மருமகளும் சேர்ந்து தங்களை அடித்ததாக ஏற்கனவே பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
'அவ இல்லாம வாழ முடியல'..! மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று தந்தை எடுத்த கோர முடிவு..!
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக மகன் பழனிசாமி தங்களை கொடுமை படுத்தி வருவதாக தெரிவித்தனர். வீட்டில் மின்சாரத்தை துண்டித்தும் குடிநீர் பிடிக்க விடாமலும் மகன் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் வாழ முடியாமல் தத்தளிக்கும் தங்களை கருணை கொலை செய்துவிட வயதான தம்பதியர் இருவரும் பரிதாபத்தோடு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!