எனக்கு நீங்க அப்பா மாதிரி.. ப்ளீஸ் விட்ருங்க! கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை கதறவிட்ட தாயின் கள்ளக்காதலன்.!

சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 

young women murder case...Mother boy friend is absconding

சென்னையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  தாயின் கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அம்சவல்லி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு சங்கீதா(18) என்ற மகள் உள்ளனர். இவர் தாயுடன் வசித்து வந்தார். 

இதையும் படிங்க;- கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

young women murder case...Mother boy friend is absconding

இந்நிலையில், அதே பகுததியை சேர்ந்த ராஜு (38) என்பவருடன் அம்சவல்லிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல அம்சவல்லி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு அம்சவள்ளி வீடு திரும்பிய போது படுக்கை அறையில் மகள் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அலறினார். மேலும், அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு உள்ளிட்டவைகள் கொள்ளை போனது. 

young women murder case...Mother boy friend is absconding

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துவிட்டு கொலுசு, கம்மல், பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள தாயின் கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  விதவை பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஏன்டா வீட்டுக்கு வந்த.. தம்பி என்று பாராமல் துடிதுடிக்க கொன்ற அண்ணன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios