கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பகுதியில் 5 மாத குழந்தையின் தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

illegal love affair... Women murder.. ex-boyfriend arrested

வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பகுதியில் 5 மாத குழந்தையின் தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை நடராஜன். இவரின் 3வது மகள் ரேஷ்மாலதா(21). இவருக்கும் சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தலைப்பிரசவத்துக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார். குழந்தை பிறந்த நிலையில் கணவர் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இதையும் படிங்க;- டியூசனுக்கு வந்த பள்ளி மாணவனை மதுகொடுத்து பலமுறை பலாத்காரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

illegal love affair... Women murder.. ex-boyfriend arrested

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி வெளியே செல்வதாக கூறிய ரேஷ்மாலதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் கால்வாயில் ரேஷ்மாலதா சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த குமரன்(28) என்பவர், கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரனை கைது செய்தனர்.

அவர் போலீசில் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாலதா குமரன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவரது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாலதாவுக்கு, அவரது பெற்றோர் சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். குமரன் சென்னை வடபழனியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குமரனின் மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணம் ஆன பிறகும் ரேஷ்மாலதாவுக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;-  ஒரே நேரத்தில் இரண்டு சகோதரர்களை கரெக்ட் செய்த இளம்பெண்.. எதிர்த்த தந்தை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

illegal love affair... Women murder.. ex-boyfriend arrested

இதற்கிடையே ரேஷ்மாலதா பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு வந்திருந்தார். குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆன பிறகும் ரேஷ்மாலதா, அவரது கணவர் வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி ரேஷ்மாலதா தனது குழந்தையை வீட்டில் விட்டுட்டு கள்ளக்காதலன் குமரனை சந்தித்து  திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குமரன்  ரேஷ்மாலதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஆற்று கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளார். 

இதையும் படிங்க;- விதவை பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஏன்டா வீட்டுக்கு வந்த.. தம்பி என்று பாராமல் துடிதுடிக்க கொன்ற அண்ணன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios