உல்லாசத்தின் போது அந்த இடத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலி.. அலறி துடித்த கள்ளக்காதலன்.!

முத்துக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. நெருக்கத்தை பயன்படுத்தி கொண்டு மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும்  நகைகளை முத்துக்குமார் வாங்கியுள்ளார்.

Woman who started fire by pouring petrol arrested

உல்லாசமாக இருந்த போது கள்ளக்காதலன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த கள்ளக்காதலியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (36). இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!

Woman who started fire by pouring petrol arrested

நெருக்கத்தை பயன்படுத்தி கொண்டு மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும்  நகைகளை முத்துக்குமார் வாங்கியுள்ளார். இதை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்துள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான தவசிபட்டி செல்லும் காட்டுப்பகுதிக்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, மகேஸ்வரி பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை இடுப்புக்கு கீழ் பகுதியில் ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதையும் படிங்க;-  அம்மா சார் என்ன கொடைக்கானலுக்கு கூப்பிட்டு போயி ரூம்ல வச்சு இப்படி பண்ணிட்டாரு.. கதறிய மாணவி.. போக்சோவில் கைது

Woman who started fire by pouring petrol arrested

இதனால், படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர்.  பாலியல் தொல்லை மற்றும் பணம் கேட்டு டார்ச்சர் செய்த விவகாரத்தில் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios