டெல்லியில் பயங்கரம்.. காதலியை கொலை செய்து தாபா ஃபிரீசரில் வைத்த காதலன்.. அதிர வைக்கும் காரணம்..!
தலைநகர் டெல்லி நசாப்கார்க்கை சேர்ந்தவர் சச்சின் கெலாட். இவர் டெல்லி உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளனர்.
காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதை தட்டி கேட்டதால் ஆத்திரப்பட்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து ஃப்ரீசரில் வைத்திருந்த தாபா உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் டெல்லி நசாப்கார்க்கை சேர்ந்தவர் சச்சின் கெலாட். இவர் டெல்லி உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், சச்சின் கெலாட் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்து கொண்ட காதலி விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- அம்மா சார் என்ன கொடைக்கானலுக்கு கூப்பிட்டு போயி ரூம்ல வச்சு இப்படி பண்ணிட்டாரு.. கதறிய மாணவி.. போக்சோவில் கைது
இதனால், ஆத்திரமடைந்த அடைந்த சச்சின் கெலாட் சில நாட்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை வெளியில் தெரியாமல் இருக்க தாபாவின் ஃபிரீசரில் வைத்துள்ளார். இதனை எப்படியோ அறிந்த கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டோ போட்டி.. ஜல்லிக்கட்டு வீரர் கொலை.. வெளியான பகீர் தகவல்.!
இதனையடுத்து, காதலியை கொன்ற சச்சின் கெலாட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக டெல்லியில் காதல் விவகாரத்தில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.