மதமாற்றம் செய்யக்கோரி மனைவிக்கு அடி உதை... சிகரெட் துண்டுகளால் சூடுவைத்த கொடூர கணவன்!!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மதமாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மதமாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சந்த் முகமது என்பவர், தனது மத அடையாளத்தை மறைத்து, தன்னை ஒரு இந்துவாகவும் தனது பெயர் சானி மவுரியா என்றும் கூறி இந்து பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் அந்த பெண்ணை இஸ்லாமுக்கு மாற சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காதலன் கண் முன் காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை… காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
மதம் மாற மறுத்த அந்த பெண்ணை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமின்றி சூடான எண்ணெயை பெண் மீது ஊற்றி சித்ரவதை செய்துள்ளார். மேலும் தன் மீது போலீசில் புகார் அளித்தால், தன் உறவினர்களை விட்டு பாலியன் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி பெண்ணுடன் உல்லாசம்... வீடியோ எடுத்து மிரட்டிய சிறை வார்டன்கள் கைது!!
இதை அடுத்து அந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது சந்த் முகமது அவரை பிடித்து ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது சந்த் முகமது வயிற்றில் அடித்ததில் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பெண் ஒரு மையத்தால் மீட்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் விரைவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்.