தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான சந்திரசேகர். இவருக்கு அன்மையில் 19 வயதான ஷியாமளா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. 

சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மரணம் அடைந்துள்ளார். தனது கணவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாக மனைவி ஷியாமளா கூறிய நிலையில் மரணம் தொடர்பாக சந்திரசேகரின் தாயாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சந்திரசேகர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஷியாமளாவுக்கு 20 வயதான சிவகுமார் என்பவருடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலில் இருந்துள்ளார். ஆனால் பெரியவர்களின் அழுத்தம் காரணமாக சந்திரசேகரை மார்ச் 23ம் தேதி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னும் சிவாவுடன் ஷியாமளாவுக்கு தொடர்பு இருந்த நிலையில், இருவரும் சந்திரசேகரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஏப்ரல் 19ம் தேதி ஷியாமளா கணவருக்கு உணவில் எலி மருந்தை கலந்து தந்துள்ளார். 

ஆனால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று அவர் குணமாகியுள்ளார். இதையடுத்து சந்திரசேகரை கொலை செய்ய அடுத்த திட்டம் தீட்டிய ஷியாமளா அவரை கோயிலுக்கு போகலாம் என அழைத்து சென்றுள்ளார். வழியில் ஷியாமளாவின் காதலன் சிவா மற்றும் அவரது தோழர்கள் சேர்ந்து சந்திரசேகரின் காரை மறித்துள்ளனர். அப்போது சந்திரசேகரை அவர்கள் ஷியாமளாவின் உதவியோடு அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது கணவர் நெஞ்சு வலி வந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ஷியாமளா, அவரது காதலன் சிவா, மற்றும் அவர்களின் தோழர்கள் 6 பேரை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : MK Stalin : முதலில் லண்டன், அடுத்து அமெரிக்கா பயணம்.. மோடிக்கே டஃப் கொடுக்கும் ஸ்டாலின்.! புது ஸ்கெட்ச்.!

இதையும் படிங்க : தமிழகத்தில் தொடரும் தீண்டாமை.. 445 கிராமங்களில் ‘சாதி’ கொடுமையா ? RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல் !