Asianet News TamilAsianet News Tamil

Wife Swap:2 கல்யாணம் பண்ணியும் அடங்கல.. வெளி நாட்டு காரனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள டார்ச்சர். கணவன் கொடூரம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விவகாரத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நேத்ரா பாலர் சாமியைக் கம்பியால் பலமாக தாக்கினார்.

Wife Swap: not satisfied  after 2 marriage .. Torcher to have sex with a foreigner. Husband cruelty.
Author
Chennai, First Published Nov 10, 2021, 6:35 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கேமிற்கு ஒத்துழைக்குமாறு வற்புறுத்தி வந்த கணவனை மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்களுடன் உடலுறவு அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னை சில வெளிநாட்டு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் டார்ச்சர் செய்ததால், கணவனை கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக பெண் கொடுத்த வாக்கு மூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 " என் பொண்டாட்டி உனக்கு"  "உன் பொண்டாட்டி எனக்கு" என்ற ரேஞ்சில் மாற்றி மாற்றி பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் கலாச்சாரம் உலகம் முழுவதும் தலைதூக்கி வருகிறது. தற்போது இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் பரவலாக இருந்து வருவதை காண முடிகிறது. திருமணம் ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது,  ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவங்கள் எல்லாமே காணாமல் போய்க் கொண்டிருக்கும் அவல நிலைக்கு இந்தியச் சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற அச்சம் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. 

சென்னை, கல்கத்தா, மும்பை, பெங்களூரு,  உள்ளிட்ட பெருநகரங்களில் பணக்காரர்கள் சந்தித்துக்கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி அதிர்ச்சியூட்டும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பணக்காரர்கள் ஒன்று கூடும் இடங்களில் அவர்களது கார் சாவியை குலுக்களில் போட்டு பிறகு யார் கையில் எந்த சாவி கிடைக்கிறதோ அந்த ஜோடிகள் மனைவிகளை மாற்றிக் கொள்வது என்ற ஒரு அபத்தமான, அசிங்கமான விளையாட்டு அரங்கேறிவருவது அடிக்கடி அம்பலமாகி வருகிறது. இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் மதநாயக்கனஹள்ளி போலீசார் மனைவியை மாற்றிக்கொள்ளும் திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு வற்புறுத்தி வந்த கணவனை மனைவி அடித்துகொலை செய்துள்ள சம்பவம் குறித்து தெரிவித்திருப்பதாவது:-

Wife Swap: not satisfied  after 2 marriage .. Torcher to have sex with a foreigner. Husband cruelty.

பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகாவிலுள்ள மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் சமீபத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு கோடீஸ்வரர், ரியல் எஸ்டேட் அதிபர் தனது இரண்டாவது மனைவியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தான் அது. தொழிலதிபர் சுவாமி ராஜ் (46) என்ற பாலர் சாமியை படுகொலை செய்த மனைவி நேராக காவல் நிலையம் சென்று சரண் அடைந்துள்ளார். தொழில்முறையில் அவர் அழகுக்கலை நிபுணரான ஆவர், நேத்ரா தானி என்ற அந்த பெண், தான் ஏன் தன் கணவனைக் கொன்றேன் என்ற காரணத்தைக் கூறி போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ஐடி துறையுடன் சேரந்து பெங்களூரு புறநகர் பகுதியில் ரியல் எஸ்டேட் வேகமாக விரிவடைந்து வருகிறது. ரியல் எஸ்டேட் வியாபாரியான பால சுவாமி வடக்கு பெங்களூரு தாலுகாவில் வீட்டு மனைகள் விற்பனை செய்து அதன்மூலம் கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக உயர்ந்தவர் ஆவார். கையில் கோடிக்கணக்கில் பணம் குவிந்தவுடன் பாலா சாமியின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறியது, பணத்தை வைத்து உல்லாசமாக வாழ திட்டமிட்டார் பாலசாமி, ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தும் மதநாயக்கனஹள்ளி சார்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.அது நாளடைவில் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது, இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, 

Wife Swap: not satisfied  after 2 marriage .. Torcher to have sex with a foreigner. Husband cruelty.

நேத்ராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பால சுவாமி தனது பெயரில் ஹாரோ காடனஹள்ளியில் 6 கோடி ரூபாய் செலவில் பெரிய பங்களா ஒன்று கட்டினார், அங்கிருந்தபடி வியாபாரத்தை நடத்தி வந்தார், அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தும் அவருக்கு காம மோகம் அடங்கவில்லை, தன்னுடன் வியாபாரம் செய்பவர்களின் மனைவிகளையும் அனுபவிக்க அவர் விரும்பினார், ஒருகட்டத்தில் அந்த முடிவில் தீவிரமான இறங்கிய அவர்,  wife swap network ஒன்றை உருவாக்கினார். அதில்  வேறொருவரின் மனைவியை  அனுபவிக்க விரும்பினால் அவருக்கு தனது மனைவியை அனுப்பவேண்டும் என்பதுதான் அதன் விதி. இந்த திட்டத்திற்கு தனது இரண்டாவது மனைவியை ஒத்துழைக்குமாறு பாலர் சுவாமி வற்புறுத்தி வந்தார். இரண்டாவது மனைவியாக இருந்தாலும் தன்னால் அப்படி ஒரு செயலை செய்ய முடியாது என்று  நேத்ரா மறுத்துவிட்டார். ஆனால் பாலர் சாமி விடாமல் அவரை தொல்லை கொடுத்து வந்தார். ஒருகட்டத்தில் மனைவியைத் துன்புறுத்த ஆரம்பித்தார் பாலர்சாமி. 

Wife Swap: not satisfied  after 2 marriage .. Torcher to have sex with a foreigner. Husband cruelty.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விவகாரத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நேத்ரா பாலர் சாமியைக் கம்பியால் பலமாக தாக்கினார். அதில் பாலர் சாமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அதற்குப் பிறகு நேத்ரா மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்திற்கு சென்றார். பின்னர் கணவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். தனது கணவர் தன்னை வெளிநாட்டு ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகவும், அதனால்தான் தான் கொலை செய்ததாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதே கேட்ட போலீசார் ஆடிப்போயினர். பின்னர் அது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்த முதல் மனைவி மேற்கூறிய  காரணங்களில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளதுடன், பாலர்சாமி தன்னையும் தனது குழந்தைகளையும் நல்லபடியாய் கவனித்து வந்தார் என்றும், நேத்ரா  கூறுவதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதில் உண்மை என்ன என்பதை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios