கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (29). அவரது மனைவி அம்சலேகா (27). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

கள்ளக்காதலுக்காக மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (29). அவரது மனைவி அம்சலேகா (27). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையும் படிங்க;- ஆண்டிகளை வைத்து மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. உள்ளே புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அம்சலேகா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அம்சலேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, பிரேத பரிசோதனை முடிவில் அம்சலேகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கணவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலிக்காக ஏழுமலை தனது மனைவி அம்சலேகாவை கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி மகாலட்சுமி என்பவருக்கும் ஏழுமலைக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நாளடைவில் இந்த விவகாரம் மனைவி அம்சலேகாவுக்கு தெரியவந்தது. 

எனவே சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை தனது மனைவி என்றுகூட பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்து தற்கொலை என நாடகமாடியுள்ளார். ஊர் மக்களிடம் தனது மனைவி தற்கொலை செய்துவிட்டதாக கூறி அழுது நாடகமாடி உள்ளார். இதனையடுத்து, ஏழுமலை, மகாலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க;- என்னை மட்டையாக்கிவிட்டு என் மனைவியுடன் மாஜாவாக இருப்பான்! கள்ளக்காதல் விவகாரத்தில் பிரகாஷ் கொலை! வெளியான பகீர்