என்னை மட்டையாக்கிவிட்டு என் மனைவியுடன் மாஜாவாக இருப்பான்! கள்ளக்காதல் விவகாரத்தில் பிரகாஷ் கொலை! வெளியான பகீர்
நானும், பிரகாஷூம் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்போம். போதை ஏறியதும் வீட்டுக்கு வந்து நான் படுத்து தூங்கி விடுவேன். நான் தூங்கியவுடன் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து நித்யாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த எனக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தேன். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் 10 நாட்களுக்கு முன் ஆற்றில் வீசி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற பிரகாஷ் திரும்பவும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி கனிமொழி கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அதே பகுதியை நித்யா என்ற பெண்ணிடம் போனில் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நித்யா (25) என்பவரை போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கணவர் வினோத்குமாருடன் சேர்ந்து பிரகாஷை கழுத்தை நெறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் பிரகாஷின் உடலை ஆட்டோவில் தூக்கிச் செல்ல வினோத்குமாரின் நண்பரான ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவரை அழைத்து மூவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை ஆட்டோவில் ஏற்றுக் கொண்டு உத்தமபாளையம் முல்லை பெரியார் ஆற்றுப்பாலம் பகுதியில் வீசியது தெரியவந்தது. இறுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றது தெரியவந்தது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம்.. தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து போட்டுதள்ளிய மனைவி
இதனையடுத்து வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு வினோத்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த பிரகாஷிடம், என்னுடைய மனைவி நித்யா கடன் வாங்கியுள்ளார். இதனால் அவருக்கும், என்னுடைய மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதேநேரத்தில் நானும், பிரகாஷூம் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்போம். போதை ஏறியதும் வீட்டுக்கு வந்து நான் படுத்து தூங்கி விடுவேன். நான் தூங்கியவுடன் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து நித்யாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த எனக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தேன். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதனால், எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம் போல் கடந்த 21-ம் தேதி பிரகாஷூம், நானும் ஒன்றாக மது குடித்தோம். சிறிது நேரத்தில் நான் வீட்டுக்கு சென்று விட்டேன். வீட்டின் ஒரு ரூமில் தூங்குவதை போல நடித்தேன். அப்போது, மனைவி கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நான் துணியால் பிரகாஷின் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை ஆற்றில் வீசியதாக தெரிவித்தார்.
இதனிடையே, பிரகாஷின் உடலை முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதியில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர். 10 நாட்களுக்கு பிறகு ஆற்றுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது மனைவி கனிமொழியை அழைத்து பிரகாஷின் உடலை கையில் அணிந்திருந்த செம்பு காப்பு மூலம் அடையாளம் கண்டுபிடித்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்