கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம்.. தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து போட்டுதள்ளிய மனைவி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த கரிகசீனேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (38). இவரது மனைவி சினேகா (30). குடும்ப வறுமையின் காரணமாக ஹரிஷ்குமார் ஐதராபாத்தில் டைல்ஸ் வேலைக்கு சென்றுள்ளார். சமீபகாலமாக பணிகள் ஏதும் இல்லாததால் ஹரிஷ்குமார் சொந்த கிராமத்திற்கு திரும்பினார்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அண்ணியுடன் உல்லாசம்.. கடுப்பில் இருந்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?
இதற்கிடையில், கணவர் ஐதராபாத்தில் வேலைக்கு சென்ற நேரத்தில் ராமகுப்பம் அடுத்த டேக்குமானுதாண்டா பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவருடன் சினேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு சென்றதால் இருவரும் அக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, ஹரிஷ்குமார் கிராமத்திற்கு திரும்பியதால் சினேகாவும், சதீஷ்குமாரும் சந்திக்க முடியாமலும், உல்லாசமாக இருக்க முடியாமலும் ஏக்கத்தில் இருந்து வந்தனர். இதனால், கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் ஹரிஷ் குமாரை கொலை செய்ய மனைவி மற்றும் சதீஷ்குமார் திட்டமிட்டனர்
இதையடுத்து, சதீஷ்குமார் தனது நண்பர்களுக்கு 5 லட்சம் கொடுத்து ஹரிஷ் குமாரை கொலை செய்யுமாறு கூறி முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார். அதன்படி கடந்த 25ம் தேதி தங்களது திட்டத்தை நிறைவேற்றும் வகையில், சினேகா, தனது தோழியின் சகோதரரிடம் பணம் வாங்கி வரும்படி கிருஷ்ணாபுரத்திற்கு ஹரிஷ்குமாரை அனுப்பி வைத்தார். அதன்படி அங்கு சென்ற போது வனப்பகுதியில் மறைந்திருந்த சதீஷ்குமார் உள்பட 5 பேர் கும்பல், ஹரிஷ்குமாரை கழுத்தறுத்து கொலை செய்து அருகில் இருந்த முட்புதரில் சடலத்தை வீசிவிட்டு சென்றனர்.
இதற்கிடையில் சினேகா கடந்த 28ம் தேதி, பணத்தை வாங்கி வர சென்ற தனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை கண்டு பிடித்து தாருங்கள் என குப்பம் போலீசில் புகார் அளித்து கதறினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கூலிப்படையை ஏவி சினேகாவும், சதீஷ்குமாரும் திட்டமிட்டு ஹரிஷ்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகா அவரது கள்ளக்காதலன் சதீஷ்குமார் உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- என் அம்மாவின் கள்ளக்காதலன் என்னை நாசம் பண்ணிட்டான்.. ஃபர்ஸ்ட் நைட்டில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.!