தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?

கண்ணூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்து அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலில் 18 வெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

Vishnupriya murder case.. Kerala police arrest Accused.. Shock information

கண்ணூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்து அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலில் 18 வெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் விஷ்ணு பிரியா (23). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது பாட்டி சமீபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்துது, அவரது பெற்றோர் பாட்டியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தனர். இதனால், விஷ்ணு பிரியா வீட்டில் தனியாக இருந்தள்ளார். நேற்று முன்தினம் விஷ்ணு பிரியா படுக்கை ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஷ்ணு பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை.. அப்புறம் இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா?

Vishnupriya murder case.. Kerala police arrest Accused.. Shock information

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பததிவு செய்து விசாரணை நடத்திய போது வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் கூறினர். மேலும் விஷ்ணு பிரியாவின் செல்போனில் இருந்த விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கூத்துபறம்பு மானந்தேரி பகுதியை சேர்ந்த ஷியாம்ஜித் (23) என்பவரின் எண் இருந்தது. இதையடுத்து போலீசார் ஷியாம்ஜித்தை பிடித்து விசாரித்தனர். இதில் விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்;- விஷ்ணு பிரியாவுக்கு பொன்னானி பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஷியாம் ஜித்துக்கு தெரிய வந்தது. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு ஷியாம்ஜித்துடன் பேசுவதை விஷ்ணு பிரியா நிறுத்தினார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தான் விஷ்ணு பிரியாவை கொல்ல தீர்மானித்ததாக போலீசில் தெரிவித்தார். 3 நாட்களுக்கு முன்பு தான் விஷ்ணு பிரியாவைக் கொல்ல ஷியாம்ஜித் தீர்மானித்துள்ளார். இதற்காக ஒரு அரிவாளையும், சுத்தியலையும் வாங்கியுள்ளார். இதனையடுத்து, விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷியாம்ஜித் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார். அவரை பார்த்ததும் விஷ்ணு பிரியா அலறியுள்ளார். 

Vishnupriya murder case.. Kerala police arrest Accused.. Shock information

கண்ணிமைக்கும் நேரத்தில் சுத்தியலால் அவரது தலையில் பலமாக அடித்துள்ளார். பின்னர் அரிவாளால் கழுத்தை அறுத்துள்ளார். இதன் பின்னர் உடனடியாக வீட்டை வீட்டு வெளியேறிய அவர் பைக்கில் வீட்டுக்கு சென்று குளித்துள்ளார். பின்னர் வழக்கம் போல தந்தையின் கடையில் இருந்த போதுதான் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே விஷ்ணு பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவரது உடலில் பலமான 18 வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.  தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  போலீஸ் இன்பார்மர் என நினைத்து பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios