கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை.. அப்புறம் இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா?
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (35). இவரது மனைவி விஜயசாந்தி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நவீன்குமார் வேடசந்தூரில் உள்ள இரும்பு கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் விஜயசாந்தியை நவீன்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நவீன்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகம் மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி விஜயசாந்தியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது விஜயசாந்தி கள்ளக்காதலனை ஏவி கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசாரிடம் மனைவி அளித்த வாக்குமூலத்தில்;- ஜனங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமிக்கும், விஜயசாந்திக்கும் 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு எப்படியோ தெரியவந்தது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை பழனிச்சாமி, நவீன்குமாரை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நவீன்குமாரை கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால், இருவரும் எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளனர். இதனையடுத்து, இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.