2 சிறுமிகளுடன் பைக் சாகசம் செய்த மும்பை இளைஞர் கைது
இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் ஸ்டண்ட் சாகசம் செய்த மும்பையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து 24 வயது இளைஞரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆன்டோப் ஹில் மற்றும் வடலா காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
"குற்றம் சாட்டப்பட்டவர் சமீபத்தில் இரண்டு சிறுமிகளுடன் தனது பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவம் நகரின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) பகுதியில் நடந்துள்ளது. வீடியோ வெளியானதை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது" என்று என மும்பை போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
சின்னப்புள்ளதனமா இருக்கு! ராகுல் காந்தி மேல்முறையீடு குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
பைக் சாசத்தில் ஈடுபட்ட நபர் பற்றித் தெரிந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளிக்குமாறு ட்விட்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் மூலம் இளைஞரின் இருப்பிடத்தை அறிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 308 (கொலை முயற்சி) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிபிஐ வைர விழா: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்! புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கம் திறப்பு!