சின்னப்புள்ளதனமா இருக்கு! ராகுல் காந்தி மேல்முறையீடு குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
மோடி என்ற பெயர் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார்.
கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2019ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "எல்லா திருடர்களுக்கும் மோடியின் என்ற பெயர் வந்தது எப்படி" என்று பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
சூரத் விசாரணை நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று சூரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் சென்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்கிறார். காங்கிரஸின் அரசியல் லாபங்களுக்காகவே ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக பாஜக சாடுகிறது.
சிபிஐ வைர விழா: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்! புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கம் திறப்பு!
இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் கிரிண் ரிஜிஜு ராகுல் காந்தி மேல்முறையீட்டு முனு தாக்கல் செய்வது குழந்தைத்தனமானது என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் செல்லக்கூடும். குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய நேரடியாகச் செல்லவேண்டிய அவசியமில்லை. பொதுவாக, எந்த குற்றவாளியும் தானே நேரில் செல்வதில்லை. ஆனால் இவர் தன் ஆதரவுத் தலைவர்கள் மற்றும் உதவியாளர்களுடன் செல்வது ஒரு நாடகம் மட்டுமே" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், "ராகுல் காந்தி மேல்முறையீட்டு செய்வது நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சி. நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இத்தகைய தந்திரங்களில் இருந்து தப்பிக்கத் தெரியும்." என்றும் தெரிவித்துள்ளார். இத்துடன் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ராகுல் காந்தியின் மேல்முறையீடு பற்றிப் பேசியுள்ள வீடியோவையும் கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளார்.
காக்கி டவுசர், கையில் லத்தி... இவர்கள்தான் கௌரவர்கள்! மீண்டும் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு!