குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் அல்போன்ஸை  பாலக்கரை போலீசார்  கைது செய்தனர். நிலவன், ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்த அவர், அந்த கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை 15 முறை பகிர்ந்துள்ளார். இதற்காக கைது செய்யப்பட்ட 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் கிறிஸ்டோபர் அல்போன்ஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆபாச படங்களை பகிர்ந்ததால்  தமிழகத்தில் முதல் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுபோன்ற குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்தவர்களின் லிஸ்ட் காவல்துறை வசம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்தப்பட்டியலில் இருப்பதால் அடுத்தடுத்து கைது செய்யப்படலாம் எனக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.