தஞ்சாவூரில் மனைவியை கிண்டல் செய்த இளைஞரின் நடு மண்டையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூரில் மனைவியை கிண்டல் செய்த இளைஞரின் நடு மண்டையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (22). வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். 

இதுகுறித்து விஜயிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதனையடுத்து விஜய் பலமுறை அஜீத்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அஜித் எதையும் பொருட்படுத்தாமல் கிண்டல் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக விஜய் தனது நண்பர் திவாகருடன் சேர்ந்து அஜித்திடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது திவாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அஜித்தின் நடு மண்டையில் வெட்டியுள்ளான். இதில் அஜித் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மகன் தாக்கப்படுவதை தடுக்க வந்த அஜித்தின் தந்தை ராஜகோபாலனுக்கு (48) வெட்டு விழுந்துள்ளது. இதில் அவரது இடதுகை மணிக்கட்டுடன் துண்டானது. உடனடியாக அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜய் மற்றும் திவாகரனை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- யாரு வீட்டு பொண்ண யாரு கல்யாணம் பண்றது.. தகுதி தராதரம் வேணா.. இளைஞரின் தாயை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை