Asianet News TamilAsianet News Tamil

இனிமே யாராவது வாலாட்டுவீங்க.. சங்கிலி பறித்த கொள்ளையனை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ். பீதியில் ரவுடிகள்

பின்னர் அவர்கள் 3வரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகிலிருந்த பென்னலூர் ஏரி பகுதியை யொட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் நுழைந்து பதுங்கினர். இதனையடுத்து அவர்களை தேடிப்பிடிக்க காட்டு பகுதிக்குள் போலீசார் முற்றுகையிட்டு கொள்ளையர்களை தேடினர். 

The police who put the chain-snatched robber in the encounter. Rowdies in panic
Author
Chennai, First Published Oct 11, 2021, 4:40 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி காட்டுப்பகுதிக்குள் பதுங்கிய வடமாநில கொள்ளையர்களில் ஒருவனை போலாசார் என்கவுண்டரில் சுட்டுக்  கொன்றனர். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையிலான போலீசார் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து கூலிப்படை கொலைகள் பழிவாங்கும் கொலைகள் அரங்கேறி வந்தநிலையில், தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தி 2 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றப்பின்னணி உள்ளவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், முக்கியம் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

The police who put the chain-snatched robber in the encounter. Rowdies in panic

இதையும் படியுங்கள்: இமயமலைபோல் உள்ள அதிமுகவை பரங்கிமலைபோல் உள்ள சீமான் விமர்சிப்பதுதான் சிறந்த காமெடி.. எகிறி அடித்த ஜெயக்குமார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியைச் சார்ந்த இந்திரா (54) என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ளபேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த 3 வடமாநில கொள்ளையர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினார். அதில் அதிர்ச்சி அடைந்த இந்திரா, திருடன் திருடன் என கூச்சலிட்டார், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையர்களை  அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது அதில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினான். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் பின்வாங்கினர்.

The police who put the chain-snatched robber in the encounter. Rowdies in panic

இதையும் படியுங்கள்: அய்யய்யோ... தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. 15 தேதி வரைக்கும் நிலைமை ரொம்ப டேஞ்சர்.. பார்த்து அலர்டா இருங்க.

பின்னர் அவர்கள் 3வரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகிலிருந்த பென்னலூர் ஏரி பகுதியை யொட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் நுழைந்து பதுங்கினர். இதனையடுத்து அவர்களை தேடிப்பிடிக்க காட்டு பகுதிக்குள் போலீசார் முற்றுகையிட்டு கொள்ளையர்களை தேடினர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார், அது அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் அவர்களை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஹெலிகேம் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பதுங்கி இருந்த மூன்று கொள்ளையர்களின் ஒருவனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொண்டனர். 2 பேரை கைது செய்தனர், என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்காஷா என்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் ஸ்ரீபெரம்புதுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios