Asianet News TamilAsianet News Tamil

அய்யய்யோ... தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. 15 தேதி வரைக்கும் நிலைமை ரொம்ப டேஞ்சர்.. பார்த்து அலர்டா இருங்க.

குறிப்பு : வரும் 13  ஆம் தேதி அந்தமான்  மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திர -  ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

O God... Warning to the people of Tamil Nadu .. The situation is very dangerous till the 15th .. Watch and be alert.
Author
Chennai, First Published Oct 11, 2021, 1:54 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக 11.10.2021: சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை,  ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

O God... Warning to the people of Tamil Nadu .. The situation is very dangerous till the 15th .. Watch and be alert.

மேலும், 12.10.2021: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய   மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்  பெய்ய கூடும்.

இதையும் படியுங்கள்: ஆட்சி இல்லனா என்ன? இதை உற்சாகமா கொண்டாடுறோம்.. ஓபிஎஸ். இபிஎஸ் கூட்டாக எடுத்த சூப்பர் முடிவு.

13.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர  மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

O God... Warning to the people of Tamil Nadu .. The situation is very dangerous till the 15th .. Watch and be alert.

14.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும். ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர  மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

15.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய   மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக    மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திர -  ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதையும் படியுங்கள்:  என்னால ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. சரண்டரான திமுக எம்.பி பரபரப்பு விளக்கம்.

O God... Warning to the people of Tamil Nadu .. The situation is very dangerous till the 15th .. Watch and be alert.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

வங்கக் கடல் பகுதிகள்: 11.10.2021: அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
12.10.2021,13.10.2021:  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 14.10.2021,15.10.2021:  தெற்கு வங்க கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

O God... Warning to the people of Tamil Nadu .. The situation is very dangerous till the 15th .. Watch and be alert.

அரபிக்கடல் பகுதிகள்: 14.10.202,15.10.2021: கேரள, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு:  imdchennai.gov.in  இணையதளத்தை காணவும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios