திருவாரூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இருவர் குடிபோதையில்  சண்டையிட்டு கத்தியால் குத்திக் கொண்ட சிசிடிவி வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் மோதல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவாரூர் மடவடியார் தெருவை சேர்ந்த சுரேஷ் இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவிக்கு விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த கண்ணன் (55) என்பவர், குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதை விரும்பாத சுரேஷ் என் குழந்தையை பார்க்க ஏன் வருகிறாய் என கண்ணனுடன் சண்டையிட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, கட்டி உருண்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை குத்தி உள்ளார். பதிலுக்கு கண்ணனும் திருப்பி தாக்கியுள்ளார். பிரசவ மருத்துவமனையில் வாயிலில் இரண்டு பேர் கத்தியால் மோதிக்கொண்ட சம்பவத்தால் அங்கிருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர். 

தனிமைச் சிறையில் சவுக்கு சங்கர் ..?? ஜெயிலில் உண்ணாவிரதம்.. பதறும் வழக்கறிஞர்.

கத்திகுத்து- போலீஸ் விசாரணை

கத்தி குத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த கண்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டு, கத்தியால் குத்திக் கொள்ளும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

பிரபல ரவுடி கொலை.. ஸ்கெட்ச் போட்ட கூலிப்படை - அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்.!