Asianet News TamilAsianet News Tamil

தனிமைச் சிறையில் சவுக்கு சங்கர் ..?? ஜெயிலில் உண்ணாவிரதம்.. பதறும் வழக்கறிஞர்.

சவுக்கு சங்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதை கண்டித்து  அவர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். 

Savukku Shankar Hunger Strike In Jail- Advocate Info
Author
First Published Oct 1, 2022, 4:30 PM IST

சவுக்கு சங்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதை கண்டித்து  அவர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். இது பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் பணியில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளராக சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து துணைவுடன் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தார் அவர். நீதிபதிகள் குறித்தும் நீதிமன்றங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது, இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத காலம் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை குறித்து கேள்வி எழுப்பினால் இப்படித்தான் நீதிமன்றம் எதேச்சதிகாரமாக நடந்து கொள்ளுமா என பலரும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Savukku Shankar Hunger Strike In Jail- Advocate Info

நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விரைவில் சந்திப்பேன் என ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.  ஆனால் தற்போது அவருக்கு சவுக்கு சங்கரை சந்தித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞருக்குகூட அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் புகழேந்தி சவுக்கு சங்கர், கடலூரில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: மனைவி, மாமியார் கண்ணெதிரே பிரபல ரவுடி கொலை.. இதுதான் காரணமா? திண்டிவனம் கோர்ட்டில் 4 பேர் சரண்..!

எனவே சிறை அதிகாரிகள் அவரை  சந்திக்க எவரையும் அனுமதிப்பதில்லை என கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் வழக்கறிஞர் புகழேந்தி, சவுக்கு சங்கர் அரசு பணியிலிருந்து நீக்கப்பட்ட உத்தரவை அவரிடம் வழங்க அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அதை அவர் வாங்க மறுத்துள்ளார், எனவே அவர் இருக்கிற அறையில் அந்த அரசு உத்தரவை அவர்கள் ஒட்டி வைத்திருக்கிறார்கள். அந்த உத்தரவை சவுக்கு சங்கர் கிழித்து போட்டுள்ளார். அவர் அந்த உத்தரவை கிழித்தார் என்பதற்காக ஒரு மாதம் அவரை யாரும் சந்திக்க கூடாது என அவருக்கான நேர்காணலை சிறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

Savukku Shankar Hunger Strike In Jail- Advocate Info

வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக அவரை சந்தித்து வந்த நிலையில் என்னால்கூட அவரை சந்திக்க முடியவில்லை. எனது வழக்கறிஞர் ஏன் வரவில்லை, சந்திக்க நீங்கள் அனுமதி மறுக்கிறீர்களா என அவர் அதிகாரிகளிடம்  கேட்டதற்கு அவர்கள் ஒரு மாதம்  உங்களுக்கு நாங்கள் தண்டனை கொடுத்திருக்கிறோம் என கூறியுள்ளனர். அப்படி என்றால் அது எனக்கு எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என சவுக்கு சங்கர் கேட்டுள்ளார், ஆனால் அவர்களோ, வாய்மொழி உத்தரவு என தெரிவித்துள்ளனர். எனவே சிறைத் துறையில் இந்த எதேச்சதிகாரத்தை கண்டித்து சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கணவரை கழற்றிவிட்ட உஷாவை உஷார் செய்த கள்ளக்காதலர்கள்! உல்லாசத்திற்கு போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி

கடலூர் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை அதனால் என்னை புழல் சிறைக்கு மாற்றுங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தங்கியுள்ள பிளாக் மூடப்பட்டுள்ளது. இதனால் மற்ற சிறை கைதிகள் கூட அவரை சந்திக்க முடியாத நிலை உள்ளது. எந்த சிறைக் கைதியையும் தனிமைச் சிறையில் அடைக்க சட்டத்தில் இடமில்லை, இவ்வாறு புகழேந்தி கூறியுள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios