தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் சாலை காமட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (27). இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி இரவு ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யபட்டு ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் சாலை காமட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (27). இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி இரவு ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தலையை சப்தகன்னியம்மன் கோயில் வாசலிலும், உடலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்திலும் வீசி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி சதீஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: புருஷனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இந்நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ் குமார் நேற்று வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் நண்பன் சபில் என்பவர் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சதீஷ் குமார் தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சபிலை பார்த்து விட்டு மாலை அங்கேயே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனை அறிந்த மணிகண்டனின் நண்பர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது சமாதானம் பேசுவதாக தனியாக அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சதீஷ் குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதையும் படிங்க: வீட்ல யாரும் இல்ல.. உல்லாசமா இருக்கலாம் வர்றியா! இளம்பெண்ணை நம்பி சென்ற இன்ஜினியர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

உடலில் வெட்டு விழ்ந்த நிலையில் சுதாரித்து கொண்டு சதீஷ் குமார் அலறியபடி ஓடிய போதும் அவரை விடாமல் ஓட ஒட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். நீண்ட நேரம் சதீஷ் குமார் வராததால் அவரை தேடி சென்ற நண்பர்கள் சதீஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.