கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஜீவாநகரை சேர்ந்தவா் ரகுமத்துல்லா (25). இவர் தனது நண்பர் ஒருவருடன் செல்வபுரம் தில்லை நகருக்கு சென்றார். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த ஆசாமிகள் சிலர் திடீரென ரகுமத்துல்லாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

கோவையில் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஜீவாநகரை சேர்ந்தவா் ரகுமத்துல்லா (25). இவர் தனது நண்பர் ஒருவருடன் செல்வபுரம் தில்லை நகருக்கு சென்றார். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த ஆசாமிகள் சிலர் திடீரென ரகுமத்துல்லாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ரகுமத்துல்லா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- உன்னால தான் என் புள்ள செத்தான்.. கள்ளக்காதல் விவகாரத்தால் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை..!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரகுமத்துல்லாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரகுமத்துல்லா உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல்! வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த மகன் ஆணவக்கொலை.. ஐசியூவில் மருமகள்.!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மது போதையில் யாராவது கத்தியால் குத்திக்கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.