நான் லீவுல இருக்கேன்.. வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கிட்டு போ.. விதவை பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த விஏஓ.!
கணவரின் இறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்தம் செய்ய, பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார். ஒறையூர் வி.ஏ.ஓ.விடம் வருவாய்த் துறையினர் அந்த மனுவை அனுப்பினர். அவர், விடுமுறையில் இருந்தார். இதனால், விதவை பெண் செல்போனில் வி.ஏ.ஓ.வை தொடர்பு கொண்டார். அப்போது பேசிய வி.ஏ.ஓ. தான் விடுமுறையில் உள்ளதாகவும், கையெழுத்து வாங்க வீட்டிற்கு வருமாறும் பாலியல் நோக்கத்துடன் பேசியுள்ளார்.
பண்ருட்டி அருகே விதவை பெண்ணுக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் பகுதியைச் சேர்ந்த 47 வயது விதவை பெண் இவருக்கு 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது கணவர் இல்லாததால் தாய் வீடான மாளிகைமேடு ஏரிப்பா ளையத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில், தன் கணவர் பெயரில் உள்ள காலி மனையை விற்பதற்கு அந்த பெண் முடிவு செய்தார்.
இதையும் படிங்க;- பெண் காவல் ஆய்வாளருடன் டிஎஸ்பி உல்லாசம்! - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
இதற்காக கணவரின் இறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்தம் செய்ய, பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார். ஒறையூர் வி.ஏ.ஓ.விடம் வருவாய்த் துறையினர் அந்த மனுவை அனுப்பினர். அவர், விடுமுறையில் இருந்தார். இதனால், விதவை பெண் செல்போனில் வி.ஏ.ஓ.வை தொடர்பு கொண்டார். அப்போது பேசிய வி.ஏ.ஓ. தான் விடுமுறையில் உள்ளதாகவும், கையெழுத்து வாங்க வீட்டிற்கு வருமாறும் பாலியல் நோக்கத்துடன் பேசியுள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விதவைப் பெண் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க;- புல் மப்பில் தகராறு.. தடுக்க முயன்ற காவலர்களை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியின் நிலைமையை பார்த்தீங்களா?