புல் மப்பில் தகராறு.. தடுக்க முயன்ற காவலர்களை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியின் நிலைமையை பார்த்தீங்களா?
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் ரவுண்டு பில்டிங் அருகே சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குடிபோதையில் தகராறு செய்த ரவுடிகளை தடுக்க சென்ற காவலர்களை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் ரவுண்டு பில்டிங் அருகே சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு காவலர்கள் நந்தகோபால் (47) மற்றும் ராயப்பன் (42) ஆகியோர் விரைந்தனர். அப்போது, உடைந்த பாட்டிலை கையில் வைத்து கொண்டு தகராறில் ஈடுபட்டிருந்த பாட்டில் மணியை போலீசார் பிடிக்க முயன்றனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர்! ச்சீ அசிங்கமா இல்லையா?
அப்போது குடிபோதையில் இருந்த மணிகண்டன் கையில் இருந்த உடைந்த பீர்பாட்டிலால் காவலர்கள் இருவரையும் குத்தியுள்ளார். இதில் காவலர் நந்தகோபாலின் மூக்குப்பகுதியில் ரத்தம் கொட்டியது. ராயப்பனுக்கு இடது காதின் மேல் பகுதி கிழிந்தது. இதனையடுத்து, காவலர்களை தாக்கிய பாட்டில் மணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த இரண்டு காவலர்களும் தனியார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், காவலர் நந்தகோபாலுக்கு மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
தகராறில் ஈடுபட்டு காவலர்களை தாக்கிய மற்றொரு ரவுடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மது பாட்டிலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த காவலர்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், தப்பி ஓட முயன்ற பாட்டில் மணியின் கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவனுக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- சுவாதி முதல் சத்யா வரை சென்னையில் தொடரும் ரயில்வே ஸ்டேஷன் கொலைகள் !!