ஆபாச பேச்சு! அந்த இடத்தில் தொட்டு பேசி 14 மாணவிகளிடம் ஓயாத சில்மிஷம்! சேட்டை செய்த 62 வயது கிழவனுக்கு வேட்டு
கோவையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தனியாக செல்லும் நேரத்தில், மளிகை கடை உரிமையாளர் நடராஜன் (62), அவர்களிடம் ஆபாசமாக பேசுவதுடன், தொட்டுப் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே கடைக்கு பொருட்கள் வாங்க வந்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவார்கள். இதில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தனியாக செல்லும் நேரத்தில், மளிகை கடை உரிமையாளர் நடராஜன் (62), அவர்களிடம் ஆபாசமாக பேசுவதுடன், தொட்டுப் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்பதால் மாணவிகள் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க;- ஃபாரினுக்கு சென்ற கணவர்.. ஏக்கத்தில் பரிதவித்த 39 வயது பெண்.. 25 வயது இளைஞருடன் எஸ்கேப்..!
இந்நிலையில், தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு சம்பவத்தன்று பாலியல் குறித்த விழிப்புணர்வு பற்றி விளக்கினார். அப்போது 13 வயது மாணவி, தலைமை ஆசிரியையிடம் மளிகை கடைக்காரர் பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்தார். மேலும் 14 மாணவிகளும் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொலை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர்.
இதையும் படிங்க;- எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. கடுப்பான கணவர்.. கழுத்தை கரகரவென அறுத்த பயங்கரம்.!