மதுரை தல்லாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயது சிறுவனான இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் அலுவலக உதவியாளராக ஆசீர் சுதாகர்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சிறுவனுக்கு சுதாகர்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

image

கடந்த ஒரு மாதமாக சிறுவனை தொந்தரவு செய்து வந்த அவர் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்துகிறார். பயந்து போன சிறுவன் மன உளைச்சல் அடைந்து பள்ளிக்கு செல்ல மறுத்திருக்கிறார். சிறுவனின் தாய் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தவே, வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை எடுத்து சிறுவன் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

நாடகக்காதல் ஆதரவாளருக்கு திரௌபதி சாதிவெறியாக தான் தெரியும்..! வீரமணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அங்கு சிறுவனுக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.பின் சிறுவனிடம் விசாரித்த போது தான் பள்ளியில் அலுவக உதவியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் ஆசீர் சுதாகர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்து கவலைக்கிடம்..!