நாடகக்காதல் ஆதரவாளருக்கு திரௌபதி சாதிவெறியாக தான் தெரியும்..! வீரமணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்..!
'திரௌபதி திரைப்படம் ஒரு சாதிவெறி திரைப்படம்: கி.வீரமணி -- காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப்போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம்!
வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி. இதில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி செம வைரலானது. படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரண்டு முறை திரௌபதி திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்த்துள்ளார். பெண்ணுரிமை பேசும் திரௌபதி திரைப்படத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் திரௌபதி திரைப்படத்தை விமர்சித்த திராவிடர் கழக தலைவர் வீரமணி, அதை சாதிவெறி திரைப்படம் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு மருத்துவர் ராமதாஸ் தற்போது பதிலளித்துள்ளார்.
தனது ட்விட்டரில், 'திரௌபதி திரைப்படம் ஒரு சாதிவெறி திரைப்படம்: கி.வீரமணி -- காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப்போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம்! தமிழ்நாட்டில் எல்லா சாதிகளையும் ஒழித்து விட்ட பெருமை கி.வீரமணியையே சாரும். அதற்காக அவருக்கு சாதிகளை ஒழித்த சாதனையாளர்(?!) என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.சாதி ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பெரியார் விட்டுச் சென்ற பல்லாயிரம் கோடி சொத்துகளை சுரண்டி தின்றதை தவிர இவர்கள் செய்த சேவை என்ன?' என்று பதிவிட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்து கவலைக்கிடம்..!