மகளை கள்ளக்காதலனுக்கு இறையாக்கிய கொடூர தாய்.. ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம்.!

 பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்ரமணியம் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

school student rape case...mother illegal lover Arrest

ஆபாச வீடியோக்களை காண்பித்து பிளஸ் 1 மாணவியை பலமுறை பலாதத்காரம் செய்து வந்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தை அடுத்த மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்ரமணியம் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

இதையும் படிங்க:- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டா போட்டி.. ஆத்திரத்தில் நண்பனை குத்திக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்.!

school student rape case...mother illegal lover Arrest

பெண்ணின் மகள் தற்போது பிளஸ் 1 படித்து வருகிறார். இவரிடம் பாலசுப்ரமணியம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும் அவர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பாலசுப்ரமணியத்தின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த கொடுமை தாங்க முடியாத மாணவி இது குறித்து தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் கூறி கதறி அழுதுள்ளார். 

இதையும் படிங்க:- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!

school student rape case...mother illegal lover Arrest

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். மேலும், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:- கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் விருந்து அழைத்த புதுமாப்பிள்ளையை கொலை செய்த மாமனார்.. பகீர் காரணம்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios