கல்யாணம் ஆனதை மறைத்து பள்ளி மாணவியை சீரழித்த காமக்கொடூரன்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்ததை மறைத்து 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
திருமணமானதை மறைத்து பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்ததை மறைத்து 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- ஸ்கூலில் வைத்து டிராயரை அவிழ்த்த ஆசிரியர்.. அந்தரங்க உறுப்பில் வலி.. கதறி துடித்த மாணவன்.. நடந்தது என்ன?
இந்நிலையில், மகளை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அஜித்குமார் மாணவியை வெளியூர் அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும், அஜித்தின் செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் அறிந்தனர்.
இதையும் படிங்க;- கேட்ட பணத்தை கொடுக்கலனா! உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லிடுவேன்! மிரட்டிய பெண்! மருத்துவ மாணவர் செய்த பகீர்.!
இதனையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் பாவூர்சத்திரம் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை அடுத்து அஜித்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.