சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. ஆட்டோ மீது மோதி.. நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை!
சென்னை நசரத்பேட்டை அடுத்துள்ள திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர் (25). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நசரத்பேட்டை அடுத்துள்ள திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர் (25). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எபினேசர் நேற்று இரவு திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் இருந்து ஆட்டோவில் சென்னை நோக்கி தண்டலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இதையும் படிங்க;- அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. உல்லாசத்துக்காக அண்ணணை போட்டு தள்ளிவிட்டு நாடகம்.. தம்பி சிக்கியது எப்படி?
இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல் எபினேசர் ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் நாட்டு வெடிகுண்டு வீச்சில் இருந்து தப்பிய எபினேசர் அவர்களிடம் தப்பிக்க ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த எபினேசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பித்து சென்றது.
இதையும் படிங்க;- 6 வருஷமா என்னை லவ் பண்ணிட்டு! உங்க வீட்ல சொன்னாங்கன்னு என்ன கழட்டி விட்டுட்டியே! காதலியை கதறவிட்ட காதலன்.!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எபினேசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழிக்கு, பழியாக எபினேசன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.