6 வருஷமா என்னை லவ் பண்ணிட்டு! உங்க வீட்ல சொன்னாங்கன்னு என்ன கழட்டி விட்டுட்டியே! காதலியை கதறவிட்ட காதலன்.!
6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திடீரென துண்டித்த ஆசிரியையின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் தேப்பிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ (24). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மருங்கூர் சத்திரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(35). கூலித்தொழிலாளியான இவரை ஜெயஸ்ரீ கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து மகளை கண்டித்துள்ளனர். இதனால், காதலன் மணிகண்டன் உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். காதலி தன்னுடன் பேசாததால் ஜெயஸ்ரீ மீது மணிகண்டன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயிடம் உன்னிடம் தனியாக 5 நிமிடம் பேச வேண்டும் என கெஞ்சியுள்ளார். முதலில் மறுத்த ஜெயஸ்ரீ இனி உன்னை தொல்லை பண்ண மாட்டேன் என்று கூறியதை அடுத்து நம்பி அவருடன் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து விட்டு மணிகண்டன் அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெயஸ்ரீயை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.