உன் பொண்டாட்டி அருவியில் நிர்வாணமா குளிச்சா ஆம்பள புள்ள பொறக்கும்!மந்திரவாதி பேச்சை கேட்டு கணவர் செய்த காரியம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 30 வயது பெண் கடந்த 2013ம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகியும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குழந்தை பிறந்தால் அது ஆண் குழந்தையாகத்தான் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர். 

Pune Woman Forced To Bathe In Public.. husband family arrest

நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்கச் சொல்லி வற்புறுத்திய கணவர், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 30 வயது பெண் கடந்த 2013ம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகியும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குழந்தை பிறந்தால் அது ஆண் குழந்தையாகத்தான் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர். 

இதையும் படிங்க;- என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்

இந்நிலையில், ஆண் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக மவுலானா பாபா ஜமாதர் என்ற மாந்திரீகவாதியை சந்தித்துள்ளனர். அப்போது, மாந்திரீகவாதி ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் நீங்கள் பொதுது இடத்தில் உள்ள ஒரு அருவியில் வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என பரிகாரம் சொல்லியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சடங்குகளை பின்பற்றி அந்த பெண்ணை முழு நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவித்த  அந்த பெண் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஏற்கனவே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்தத போலீசார் கணவர், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- புது மனைவியை ஆபாச வீடியோ பார்க்க சொல்லி டார்ச்சர்... அந்த இடங்களில் சிகரெட் சூடு.. கணவன் சைகோத்தனம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios