ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் பானர்ஜி. சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமாகாத சுபம் பானர்ஜி ஐ.ஐ.டி. வளாகத்தில் இருக்கும் விடுதியிலேயே தங்கி இருந்து மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கழிவறைக்கு மாணவி ஒருவர் சென்ற போது, கழிவறையின் வெளியில் இருந்து தண்ணீர் குழாயை ஒட்டி இருந்த துளை வழியாக சிறிய வெளிச்சம் தென்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அதை கூர்ந்து பார்த்த போது செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பது தெரியவந்தது. செய்வதறியாது திகைத்த அவர் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் திரண்டு வந்தனர்.

செல்போனில் படம்பிடித்து யார் என கண்டறிந்த போது தான் தெரிந்தது அது பேராசிரியர் சுபம் பானெர்ஜி என்பது. அவரது செல்போனை பறித்து பார்த்த போது அதில் மாணவியின் ஆபாச படம் இருந்தது. இதையடுத்து அவர் மீது கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் சுபம் பானர்ஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் பலமாதங்களாக இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதிகாலையில் கோர விபத்து..! தனியார் பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 20 பேர் உடல் நசுங்கி பலி..!

இதனால் தடயவியல் சோதனைக்கு சுபம் பானர்ஜியின் செல்போனை அனுப்பி வைத்துள்ள போலீசார் இதற்கு முன்பாக அளிக்கப்பட்ட வீடியோக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவை வெளிவரும் பட்சத்தில் வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் ஒருவரின் இச்செயல் ஐ.ஐ.டி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

50 வயது பெண் மீது வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத ஆசை..! வீடு புகுந்து கற்பழித்து அட்டகாசம்..!